என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வீட்டு உரிமையாளர் கைது
நீங்கள் தேடியது "வீட்டு உரிமையாளர் கைது"
சென்னை முகப்பேர் மேற்கில் பால்கனி இடிந்து விழுந்த விபத்தில் பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக வீட்டு உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
அம்பத்தூர்:
சென்னை முகப்பேர் மேற்கு கர்ணன் தெருவில் வசித்து வருபவர் நடராஜன். இவரது மனைவி லட்சுமி (வயது 45). கணவன்-மனைவி இருவரும் வீட்டு முன்பு பூ வியாபாரம் செய்து வந்தனர்.
நேற்று மாலை அவர்கள் வீட்டு முன்பு அமர்ந்து பூ வியாபாரம் செய்தனர். அப்போது வீட்டின் மாடியில் உள்ள பால்கனி திடீரென இடிந்து விழுந்தது. இதில் கீழே அமர்ந்திருந்த நடராஜன், அவரது மனைவி லட்சுமி, 9 மாத குழந்தையான பேத்தி லக்சனா ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இதேபோல் பால்கனி இடிந்து விழுந்த போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த முகப்பேர் 3-வது பிளாக்கை சேர்ந்த மகேஷ் என்பவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.
காயம் அடைந்த 4 பேரையும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி பரிதாபமாக இறந்தார். குழந்தை லக்சனா, நடராஜன், மகேஷ் ஆகிய 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இடிந்து விழுந்த வீட்டின் மாடியில் உரிமையாளர் உதயகுமார் வசித்து வருகிறார். பால்கனியில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை அவர் சரிசெய்ய வில்லை என்பது தெரிகிறது.
இது குறித்து நொளம்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக உதயகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது 2 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. #Tamilnews

×

X